உலகம் செய்தி

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் நம்பிக்கை!

ஈரானுடனான போர் மிக விரைவில் முடிவுக்குவரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் Donald Trump மீண்டும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில் மீண்டும் அமைதி பேச்சை தொடங்கி வைப்பதற்கு பாகிஸ்தான் தீவிரம் காட்டிவருகின்றது.

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பச்சைக்கொடி காட்டியுள்ளன.

எனவே, புதிய சந்திப்பிற்கான நேரம் மற்றும் இடம் குறித்து ஓரிரு நாட்களுக்குள் முடிவெடுக்கப்படவுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அமெரிக்க தரப்பில் இருந்து மேற்படி அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!