இந்தியா

தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு!

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைமூலம் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 இல் இருந்து 59 ஆக அதிகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை சட்டமூலம் 2026-ஐ மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் முன்வைத்தார்.

இச்சட்டமூலத்துக்கு தமிழக அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. தமிழக கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்நிலையில் மேற்படி சட்டமூலம்மீதான விவாதத்தில் உரையாற்றிய அமித் ஷா,

“ஐந்து தென்மாநிலங்களில் தற்போது 129 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 195 ஆக உயரும். தமிழகத்தில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 59 ஆக உயரும்.

கேரளாவில் 20 தொகுதிகளில் இருந்து 30 தொகுதிகளாகவும், ஆந்திராவில் 25 தொகுதிகளில் இருந்து 38 தொகுதிகளாகவும், தெலங்கானாவில் 17 தொகுதிகளில் இருந்து 26 தொகுதிகளாகவும், கர்நாடகாவில் 28 தொகுதிகளில் இருந்து 42 தொகுதிகளாகவும் அதிகரிக்கும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை சட்டமூலம் போன்றே தற்போதைய சட்டமூலமும் உள்ளது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு புள்ளிகூட கூடுதலாக சேர்க்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

 

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே