ஆஸ்திரேலியா

போர்க்குற்றச்சாட்டில் கைதான ஆஸ்திரேலிய முன்னாள் படை அதிகாரிக்கு பிணை!

ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றச்சாட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி Roberts-Smith பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சாட்சிகளை சந்தேகநபர் திசை திருப்பக்கூடும் என்ற அரசுத் தரப்பின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, சிட்னி நீதிமன்றம் அவருக்கு சில கடுமையான நிபந்தனைகளுடன் இவ்வாறு பிணை வழங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய ராணுவம் இருந்தபோது அவர் போர்க்குற்றச்சாட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான விசாரணைகளின் பின்னரே அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

தற்போது சிவில் நீதிமன்றத்தில் இந்த கொலை வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் ஆஸ்திரேலிய ராணுவ வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!