கிளிநொச்சியில் 02 வயது சிறுமியை பணத்திற்கு விற்ற தாயும், கள்ளக்காதலனும் கைது
கிளிநொச்சியில் இரண்டு வயதுடைய பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்து, அந்தப் பணத்தில் 15,000 ரூபாய் பெறுமதியான கைப்பேசி ஒன்றை கொள்வனவு செய்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், அந்தச் சிறுமியை விலைக்கு வாங்கிய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி ஒருவரை அவரது தாயும் கள்ளக்காதலனும் இணைந்து கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக தர்மபுரம் கிராம உத்தியோகத்தர் வழங்கிய தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. […]



