குஸ்ரா கிராமத்தை முற்றுகையிட்ட குடியேறிகள் – நெதன்யாகுவிற்கு அமெரிக்கா அழுத்தம்
மேற்குக் கரையில் உள்ள குஸ்ரா Qusra கிராமத்தின் மீது குடியேறிகள் நடத்தும் முற்றுகையை பகிரங்கமாகக் கண்டிக்குமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை Benjamin Netanyahu வெள்ளை மாளிகை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். குடியேறிகளால் குறிவைக்கப்பட்ட வீடுகளில் அமெரிக்க பிரஜை ஒருவரின் இல்லமும் அமைந்துள்ளதை தொடர்ந்து அமெரிக்காவின் இந்த இராஜதந்திரத் தலையீடு தீவிரமடைந்துள்ளது. குஸ்ராவில் உள்ள வீடுகளைக் குடியேறிகள் கிட்டத்தட்ட ஒரு வாரமாக முற்றுகையிட்டுள்ளனர். இதன்காரணமாக , அங்கு அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டு, சுமார் 15 பாலஸ்தீனியர்கள் மின்சாரம் […]



