AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் தாக்குதல்: வடகொரியாவின் புது வியூகம்
இராணுவக் கட்டமைப்புக்கள், இராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் இலக்காகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடகொரிய ஹேக்கர்கள் தீவிர சைபர் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்கொரியாவின் பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான ‘ஜெனியன்ஸ்’ (Genians) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. வடகொரிய உளவுத்துறையுடன் தொடர்புடைய ‘கிம்சுகி’ (Kimsuky) எனும் சர்வதேச ஹேக்கிங் குழு, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் போலி […]












