அரசியல் இலங்கை செய்தி

கட்சி தாவினால் எம்.பி. பதவி பறிப்பு: விரைவில் அதிரடி சட்டம்!

“மக்கள் ஆணைக்கு எதிராக செயல்படமாட்டோம். எதிரணி உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளும் எந்தவொரு திட்டமும் இல்லை.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“புதியதொரு அரசியல் கலாசாரத்துக்காகவே மக்கள் எமக்கு வாக்களித்தனர். சிலருக்கு விருப்பம் இருக்கலாம். ஆனால் எதிரணி உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைக்கும் திட்டம் எமக்கு இல்லை.

மக்கள் ஆணைக்கு புறம்பாக கட்சி தாவும் உறுப்பினர்களின் எம்.பி.பதவியை இரத்து செய்யும் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

மஹிந்த சமரசிங்க ராஜதந்திர சேவையில் ஈடுபட்டுவருகின்றார். அவருக்கு அரசியல் பதவியை வழங்குவது பற்றி நாம் யோசிக்கவில்லை.” – என்றார்.

அதேவேளை, ஜனாதிபதி செயலாளர் பதவியில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு, இல்லை என அமைச்சர் பதிலளித்தார்.

வங்குரோத்து அரசியல்வாதிகள் திட்டமிட்ட அடிப்படையில் வாந்திகளை பரப்பிவருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!