செய்தி விளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது RCB!

IPL 2026 தொடரில் Qualifier 1 ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதல் அணியாக நேடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

தர்மசாலாவில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் அணி , முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

குஜராத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் காகிசோ ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 255 ஓட்டங்கள் என்ற மாபெரும் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆர்சிபியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பவர் பிளேயிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது.

இறுதியில் குஜராத் அணி 19.3 ஓவர்களில் 162 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி