உலகம்

செங்கடல் கடற்கரை முழுவதும் ஹூதிகள் வசம்?

  • September 11, 2026
  • 0 Comments

ஹூதி கிளர்ச்சியாளர்கள் முக்கிய நகரமான மோச்சாவைக்  (Mokha) கைப்பற்றியதன் மூலம், யேமனின் செங்கடல் கடற்கரை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கமைய உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதைகளில் ஒன்றான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டேப் ஜலசந்தியின் மீதான தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஹூதி இயக்கத்துடன் தொடர்புடைய அல்-மசிரா தொலைக்காட்சி, யேமனின் மோச்சா விமான நிலையத்தைக் குறிவைத்து சவூதி படைகள் இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகத் செய்தி வெளியிட்டுள்ளது.