பிரான்ஸில் 49 பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : மூவர் உயிரிழப்பு
பிரான்ஸில் வெப்பநிலை உச்சம் தொட்டுள்ள நிலையில் சுமார் 49 பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் , கிட்டத்தட்ட 2,700 பாடசாலைகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வாரம் மூன்று முதியவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திலும் பல பகுதிகளில் வெப்பநிலை உயர்வுக்கான சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் 200,000-க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான மரணங்களைச் சந்தித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



