கணேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாரா செவ்வந்திக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் இஷாரா செவ்வந்தியின் வங்கி கணக்குகள்
குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இன்று (21) இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்தக் கொலைச் முயற்சி தொடர்பான 15 ஆவது சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி,
தனியார் வங்கி ஒன்றில் கணக்கைப் பராமரித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக
கற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி கோரிய நிலையிலேயே, சந்தேகநபர் மற்றும் அவரது வங்கி கணக்குகள் குறித்து முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மற்றும் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.





