யூதர்கள் மீதான தாக்குதல் – நீதிமன்றத்தில் முன்னிலையாகும் தாக்குதல்தாரி!
வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இடம்பெற்ற கத்துக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாக்குதல்தாரி மீது கொலைகுற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி 45 வயதான ஈசா சுலைமான் என்ற தாக்குதல்தாரி மீது இரண்டு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் மற்றும் கூர்மையான ஆயுதத்தை வைத்திருந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சோமாலியாவை பூர்வீகமாகக் கொண்ட சுலைமான், சவுத்வார்க்கில் நடந்த ஒரு தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
மேலும் இன்றைய தினம் அவர் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் (Westminster Magistrates’) நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பத்தை தொடர்ந்து பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை கடுமையான நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




