ஆஸ்திரேலியா செய்தி

உலகை மிரட்டும் Ebola வைரஸ்: ஆஸ்திரேலியாவில் பயணக் கட்டுப்பாடு?  

  • June 1, 2026
  • 0 Comments

இத்தாலி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையிலும், எபோலா பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா பயணக் கட்டுப்பாடுகளையோ அல்லது தனிமைப்படுத்தல் (Quarantine) விதிகளையோ விதிக்காது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ” சர்வதேச அளவில் எபோலா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வந்தாலும், இந்த கட்டத்தில் ஆஸ்திரேலியா பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிடவில்லை.” – என்று ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Mark Butler தெரிவித்தார். […]

உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தத்தை நாடும் ஈரான்: ட்ரம்ப் தகவல்!

  • June 1, 2026
  • 0 Comments

அமைதி ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு ஈரான் உண்மையாகவே விரும்புகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். “ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது. அது அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுடன் துணை நிற்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஓர் ஒப்பந்தமாக இருக்கும். ஆனால் இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட விரும்புபவர்கள், நான் இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும், இன்னும் மெதுவாகச் செயல்பட வேண்டும், […]

உலகம் செய்தி

மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம்!

  • June 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த தங்களின் அதிநவீன MQ-1 Predator ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள ராணுவ ரேடார் மற்றும் ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மீது அமெரிக்கப் படைகள் அதிரடி குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அண்டை நாடான குவைத் மீது ஒரே நேரத்தில் பல […]

இந்தியா செய்தி

இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்பிரமணி பதவியேற்பு!

  • June 1, 2026
  • 0 Comments

இந்தியாவின் 3ஆவது முப்படை தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றுள்ளார். முப்படை தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையிலேயே புதியவர் பதவியேற்றுள்ளார். ஜெனரல் ராஜா சுப்பிரமணி , தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்து கடந்த 1985-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாக சேர்ந்தார். ராணுவத் துணை தளபதியாக பணியாற்றிய இவர் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

இலங்கை தமிழ்ப் பெண் கார் ஏற்றிக் கொலை: சென்னையில் பயங்கரம்!

  • June 1, 2026
  • 0 Comments

சென்னை, கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், இலங்கை தமிழ் பெண்ணொருவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சென்னை கோயம்பேட்டில் பிரபல நட்சத்திர ஹோட்டலொன்று உள்ளது. அதன் உள்புறம் உள்ள மது பாரில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இரு தரப்பினர் மது அருந்தினர். அப்போது, அவர்களுக்குள் நடனமாடுவதில் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். […]

இந்தியா செய்தி

இந்தியாவிடமிருந்து ஏவுகணை வாங்கும் இந்தோனேசியா!

  • June 1, 2026
  • 0 Comments

இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை இந்தோனேசியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய மத்திய பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ஷாங்ரி-லா பாதுகாப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். ‘‘வியட்நாம் நாட்டுடனான பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இதேபோல், இந்தோனேசியா நாட்டுடனான பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடிவடையும் […]

ஆஸ்திரேலியா செய்தி

40 கிலோ கொக்கைன் கடத்தல்: ஆஸ்திரேலியாவில் சந்தேகத்திற்கிடமான லாரி எரிப்பு!

  • June 1, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, வடக்கு குயின்ஸ்லாந்தின் ஒதுக்குப்புறமான படகுத் துறைமுகத்திற்கு அருகே சுமார் 6 மில்லியன் டாலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. Mackay வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Midge Point , Jimmys Rock படகுத் துறைமுகத்தில் சனிக்கிழமை காலை 8 மணியளவில் 40 கிலோகிராம் எடையுள்ளகொக்கைன் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போதைப்பொருள் பொதிகள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கலாம் எனப் பொலிஸார் கருதுகின்றனர். முன்னதாக, அங்கு லாரி ஒன்று தீப்பற்றி எரிவதாகத் தகவல் கிடைத்து […]

இலங்கை செய்தி

யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் படுகாயம்!

  • June 1, 2026
  • 0 Comments

யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிளொன்று, வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கள்மீது மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கட்டளையைமீறி நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) பயணித்த மோட்டார் சைக்கிளை, பொலிஸார் துரத்தி வந்தனர். இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், பொலிஸார் துரத்தி வந்த மேற்படி மோட்டார் சைக்கிளானது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதன்போது அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் […]

உலகம் செய்தி

மீண்டும் பதற்றம்: அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!

  • June 1, 2026
  • 0 Comments

தெற்கு ஈரானில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக விமானப்படை தளமொன்று இலக்குவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது. ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள சிரிக் தீவில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய ஒரு மணி நேரத்திற்குள் இந்த எதிர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க தளத்தின் மீது ஈரானிய போர் விமானங்கள் குண்டுவீசி அங்கிருந்த இலக்குகளை அழித்துள்ளன. இந்த மோதல்களின் பின்னணியில், அண்டை நாடான […]

உலகம் கல்வி

காசாவிலும் இஸ்ரேல் கோரத் தாக்குதல்!

  • June 1, 2026
  • 0 Comments

காசா நகரின் மீன்பிடித் துறைமுகம் அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அத்துடன், Al-Hatabiya மற்றும் Beit Lahiya போன்ற பகுதிகளில் ட்ரோன் மற்றும் பீரங்கிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. காசாவின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட இத்தகைய தொடர்ச்சியான தாக்குதல்களால் உயிரிழப்புகளும் காயங்களும் அதிகரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலும் அதனை மீறி இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திவருகின்றது.