பிரான்ஸுக்கு அருகே ரயில் பேருந்து மோதி விபத்து
பிரான்ஸுக்கு அருகே நேற்று ரயில் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 19 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் யாருக்கும் உயிர் ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சையும் பிரிட்டனையும் இணைக்கும் சரக்கு சுரங்கப்பாதையின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கோக்வெல்ஸ் Coquelles என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.





