ஐரோப்பா

மின் வெட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

பெஞ்சமின் எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் பிரித்தானியாவின் பல பகுதிகளை இன்று  தாக்கும் நிலையில், நாடு முழுவதம் கடும் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்படும் எனவும், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பயண இடையூறுகளையும் சந்திக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புயலானது  ஆங்கிலக் கால்வாயிலிருந்து வட கடல் நோக்கி நகரும்போது, பெரிய அலைகள் உருவாகும் எனவும் இதனால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சில பகுதிகளில் கடுமையான காற்று வீசக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் ஆபத்துக்களை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்