மீனவரின் வலையில் சிக்கிய மனித உடல் – மட்டக்களப்பில் பரபரப்பு!
மட்டக்களப்பில் கல்லடி பாலத்தில் மீன்பிடிக்கச்சென்ற மீனவரின் வலையில் மனித உடல் ஒன்று சிக்கியது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த மீனவர் இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் குறித்த சடலத்தை இனங்கண்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கல்லடி புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் சம்பவ தினத்தன்று மதுபானம் அருந்திய நிலையில் நீராடச் சென்றதாகவும், இதன்போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




