ஏதென்ஸில் உள்ள கட்டிடம் ஒன்றில் வெடிவிபத்து – நால்வர் படுகாயம்
ஏதென்ஸ் நகரின் கொலோனோஸ் (Kolonos) பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரு காவலர்கள், கட்டிட மேலாளர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நால்வரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கிரேக்கக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த கட்டிடத்தில் இனங்காணப்பட்ட மர்மமான பொதியை சோதனையிட்டபோது இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



