அரிசோனாவில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் படுகாயம்
அரிசோனாவின் (Arizona) டக்சன் (Tucson) நகரின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள வணிகப் பகுதியில் நேற்று அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் சந்தேகநபர் உட்பட 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில், பொலிஸ் அதிகாரிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டதாகவும், இதனைத் தொடர்ந்தே சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது தாக்குதல்தாரியை எதிர்கொண்ட பொலிஸார் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது […]




