அனோஜன் வழக்கு – சவுதி அரேபியாவின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்க தயாராகும் சுமந்திரன்
மதநிந்தனைக் குற்றச்சாட்டில் அனோஜன் என்ற இளைஞர் மரண தண்டனை எதிர்கொண்டிருப்பதாக கூறப்படும் விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் தூதுவர் இல்லாத போதிலும், அதிகாரத்திலுள்ள உயர்மட்டப் பிரதிநிதியை உடனடியாகச் சந்தித்துப் பேசுவதற்கு நேரம் கோரவிருப்பதாகக் குறிப்பிட்டார். அதேநேரம் அனோஜன் தனது சமூக ஊடகப் பதிவை சில நிமிடங்களிலேயே நீக்கிவிட்டு, காணொளி ஊடாகப் பகிரங்கமாக மன்னிப்புக் […]



