‘காவந்திஸ்ஸ’ யானையின் மரணம் குறித்து விசாரணை: நிபுணர் குழு நியமனம்
‘காவந்திஸ்ஸ’ யானையின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளல், காட்டு யானைகளின் நலனுக்கான உரிய செயற்பாட்டு முறை ஒன்றைத் தயாரித்தல் மற்றும் யானைகளைப் பாதுகாக்கும் தேசிய வேலைத் திட்டம் தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சின் செயலாளர் ஏ.எச். சரத் விஜேசிங்கவின் தலைமையிலான இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் டி. சமிந்த பெர்னாண்டோ, பேராசிரியர் ஏ.ஜி. அனில் புஷ்பகுமார, பேராசிரியர் யூ.கே. காலிங்க பத்மலால், கலாநிதி ஜகத் […]




