சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட 232 குற்றவாளிகள் வெளிநாடுகளில் தலைமறைவு
இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட 232 குற்றவாளிகள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் 37 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் இனங்காணப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். கடந்த 20 மாதங்களில், சிவப்பு அறிவிப்புகளுக்கு உட்பட்ட […]




