இலங்கை : மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள்!
நாளை (13) அல்லது நாளை மறுதினம் (14) மீண்டும் சுகாதார பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
நிதி அமைச்சுடன் இன்று (12.02) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் திரு.ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் கூட்டத்தின் பின்னர் தலைமைத்துவ சபை மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இப்பிரச்சினையில் ஜனாதிபதியின் தலையீடு இன்றியமையாதது எனவும் இல்லையேல் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 1 visits today)