இலங்கை

இலங்கை – களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர்,  நேற்று (28.12) பிற்பகல் சுகயீனமுற்றிருந்த நிலையில்.  மருத்துவ மனையில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளார். பின்னர் மீண்டும் சுகயீனமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் ஹெரோயின் போதைப்பொருளுக்காக சிறைச்சாலையில் இருந்தவர் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோயொன்றும் பரவி வருவதால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தனர்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக மாத்தறை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ள கைதிகள் அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மூளைக் காய்ச்சலுக்கான நோயெதிர்ப்பு மருந்துகளை ஆபத்தானதாகக் கருதப்படும் மற்ற சிறைகளுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்