ஸ்பெயின் பெண்களுக்கு அதிர்ச்சி – செயற்கை அறிவுசார் தொழில்நுட்பத்தால் விபரீதம்

தென்பகுதி ஸ்பெயினின் குறிப்பிட்ட நகர் ஒன்றில் செயற்கை அறிவுசார் தொழில்நுட்பத்தின் ஊடாக அந்தப் பகுதியை சேர்ந்த சில பெண்களின் நிர்வாணப் படங்கள் சமூக வலைத்தளங்களில் தரைவேற்றம் செய்யப்பட்டமை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இலக்கு வைக்கப்பட்ட சில இளம் பெண்களின் நிர்வாணப் படங்களே இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
ஒரு செயற்கை அறிவுவார்செயலி மூலம் இந்த புகைப்படங்கள் அனைத்தும் வெவ்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு தரவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
11 இற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட 20இற்கும் அதிகமான இளம் பெண்களே இந்த நிர்வாணப் படங்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்னர். இந்த சம்பவம் குறித்து ஸ்பெயின் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)