” கப்பலை மூழ்கடித்தது போர்க்குற்றம்” – ஐ.நாவில் ஈரான் முறைப்பாடு!
இந்து சமுத்திரத்தில் ஈரான் கப்பல்மீதான அமெரிக்காவின் தாக்குதல் போர்க்குற்றமாகும் என்று ஐ.நாவில் ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே ஐ.நா.வுக்கான ஈரானின் தூதர் அமீர் சயீத் இரவானி மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
“ஈரானிய போர்க்கப்பலான தேனா சர்வதேச நீரில் தாக்கப்பட்டது. சுமார் 100 ஈரானிய மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கா ஒரு போர்க்குற்றத்தைச் செய்தது. இந்த கொடூரமான மற்றும் சட்டவிரோத தாக்குதல் சட்டம் மற்றும் கடல்வழி சுதந்திரத்தின் அடிப்படைக் கொள்கையின் கடுமையான மீறலாகும்.
மேலும், தனது நாட்டுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் கூட்டு ராணுவ நடவடிக்கையை நிறுத்த உறுதியாகவும், தெளிவாகவும், தாமதமின்றியும் தலையிட வேண்டும்.” எனவும் ஈரான் தூதுவர் வலியுறுத்தினார்.





