ஐரோப்பா

பிரான்ஸில் போதைப்பொருள் குற்றங்களுக்கு பெயர் பெற்ற பகுதியில் துப்பாக்கிச்சூடு – உயிருக்கு போராடும் நபர்!

பிரான்சின் நிம்ஸின் வால்டெகோர் மாவட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு தெருவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.

போதைப்பொருள் குற்றங்களுக்குப் பெயர் பெற்ற குறித்த பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் துப்பாக்கிபிரயோகம் நடந்ததாகவும், அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்ற நிலையில், கொலை முயற்சி தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்