வட அமெரிக்கா

கனடாவில் கூகுள் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்

கனடாவில் கூகுள் தேடுதளத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் கனடிய பயனர்களுக்கு கூகுள் தேடுதளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக கனடிய ஊடகங்களினால் வெளியிடப்படும் செய்திகள் பார்வையிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிபரல் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கு பதிலடியாக இந்த அறிவிப்பினை google நிறுவனம் வெளியிட்டுள்ளது.முன்னதாக லிபரல் அரசாங்கம் Bill C-18 என்னும் ஓர் சட்டத்தை அமுல்படுத்தி இருந்தது.

இந்த சட்டத்தின் ஊடாக கூகுள் உள்ளிட்ட பிரதான தொழில்நுட்ப நிறுவனங்கள் கனடிய ஊடகங்களுக்கு, தங்களினால் பிரசுரிக்கப்படும் தகவல்களுக்காக கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த கட்டணம் செலுத்தும் நடைமுறைக்கு கூகுள், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்பை வெளியிட்டு இருந்தன.

இவ்வாறான ஒரு பின்னணியில் கனடிய ஊடகங்களினால் வெளியிடப்படும் செய்திகளை கூகுள் தேடுதளத்தில் காண்பிக்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, google நிறுவனம் பொறுப்பற்ற ஓர் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கனடிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content