இலங்கை செய்தி

பெண் கிராம உத்தியோகத்தரிடம் பாலியல் சேட்டை!! சிரேஷ்ட கிராம சேவையாளர் கைது

Prisoner or arrested caucasian terrorist, closeup of hands in handcuffs. Arrested elderly man handcuffed hands isolated on gray background.

பிரதேச பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கல்பிட்டி பிரதேச செயலகத்தின் சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக முதலில் பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்த போதிலும் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

நடந்துகொண்டிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணிகளுக்காக வழங்கப்பட்ட டேப் கணினியை எடுத்துக்கொள்வதாக கூறி, தான் தனிமையில் இருந்தபோது, சந்தேகநபர் தனது வீட்டிற்கு அழைத்ததாக அவர் கூறினார்.

சந்தேக நபர் தனது கடமைகளை புறக்கணித்ததாக குற்றம் சாட்டி, தன்னை கையால் பிடித்ததாகவும், இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட மன வேதனையின் காரணமாகவே பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை