ஆசியா இலங்கை

பாடசாலை கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்த மாணவி

கண்டியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவி ஒருவர் பாடசாலை கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்துள்ளார்.

காயமடைந்த மாணவி கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவி நேற்று (08) காலை 11.30 மணியளவில் பாடசாலையில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தரையில் குதித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் பாடசாலையின் மாணவர் தலைவராகவும் கடமையாற்றி வருவதுடன்இ கடுகஸ்தோட்டை களுகமுவ வத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவிக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாக மாணவியின் பெற்றோர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

priya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்