கொழும்பு துறைமுகத்தில் கழுகுப்பார்வை செலுத்திய அமெரிக்க ராஜதந்திரி
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் கொழும்பு துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளார்.
துறைமுக அதிகாரசபை தலைவர் பராக்கிரம திசாநாயக்கவுடன் இணைந்து, போல் கபூர் கொழும்பு துறைமுகத்தைப் பார்வையிட்டதாக, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க- இலங்கை பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கும், இரு நாட்டு மக்களுக்கும் பலன்களை வழங்குவதற்கும் உறுதியான வாய்ப்புகளைக் கண்டறிவதே இதன் நோக்கம் என்று போல் கபூர் குறிப்பிட்டுள்ளார்.




