ஆசியா

பாகிஸ்தான் – பள்ளத்தில் கவிழ்ந்த மினி டிரக்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பலி!

பாகிஸ்தானில் மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் மினி டிரக் ஒன்று சனிக்கிழமை (18) கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பன்னு மாவட்டத்தில் இருந்து பஞ்சாப்பின் குஷாப் மாவட்டத்திற்கு சென்றுகொண்டிருந்த டிரக் குஷாபின் கென்ச் பிர் பகுதியில் ஒரு திருப்பத்தில் திரும்பியபோது சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்தது.

இதில் 5 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காயமடைந்த 9பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூலி வேலைக்காக குஷாப் நகருக்கு வந்த போது விபத்து நிகழ்த்தாக தெரிவித்தனர். அதிவேகம் காரணமாகவே டிரக் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏன்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்