உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிட எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை

உலகளாவிய கடல் போக்குவரத்து பாதுகாப்பைப் பொறுப்பாகக் கொண்டுள்ள சர்வதேச கடல்சார் அமைப்பின் பொதுச் செயலாளர் அர்செனியோ டொமிங்கஸ், ஹார்மூஸ் நீரிணையை எந்த நாடும் சட்டப்படி முற்றுகையிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், “சர்வதேச சட்டத்தின்படி, சர்வதேச கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் நீரிணைகளை மறிக்கும் உரிமை எந்த நாட்டிற்கும் இல்லை” என்று கூறினார்.

அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கை ஈரானிய துறைமுகங்களை அணுகுவதை மட்டுமே இலக்குவைத்ததாகத் தோன்றினாலும், அது நிலைமைக்கு எந்தத் தீர்வையும் வழங்காது என்றும் அவர் கூறினார்.

மேலும், தற்போது சுமார் 20,000 மாலுமிகள் பயணிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உலக பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் எச்சரித்தார்.

“இந்த கூடுதல் முற்றுகை மோதலுக்கு தீர்வு காண உதவாது. அனைவரும் விதிகளின்படி நடக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி