உலகம் செய்தி

லெபனான், இஸ்ரேலுக்கிடையில் அமைதி பேச்சு: Marco Rubio பங்கேற்பு!

இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கிடையிலான அமைதி பேச்சில் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் Marco Rubio யும் பங்கேற்கவுள்ளார்.

வாஷிங்டனில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில், லெபனான் மற்றும் இஸ்ரேலிய தரப்பினர் பங்கேற்று, தெற்கு லெபனானில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து கலந்துரையாடவுள்ளனர்.

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

பெருமளவான உடமைகளும் அழிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் லெபனான் அரச தரப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் அமைதி பேச்சு நடத்தப்படவுள்ளது.

எனினும், இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஹெஸ்புல்லா அமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, இந்தச் சந்திப்பை ரத்து செய்யுமாறு லெபனான் அரசை வலியுறுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!