இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் நாமல் – சற்று முன் வெளியான அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்வைக்கப்படவிருந்த வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் அறிவிப்பின் காரணமாகவே நாமல் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தனிப்பட்ட காரணங்களுக்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என வர்த்தகர் தம்மிக்க பெரேரா கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட வேண்டும் என கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை