உலகம் செய்தி

மத்திய கிழக்கு பதற்றம்- ரஷ்யாவுக்கும் பெரும் லாபம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் ரஷ்யா
அதிக வருமானம் பெறுகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் அதனால் உயர்ந்துள்ள எரிசக்தி விலைகள் ரஷ்யாவுக்கு சாதகமாக அமைந்துள்ளன.

மேலும், ரஷ்ய எண்ணெய் மீது விதிக்கப்பட்டிருந்த சில தடைகள் தளர்த்தப்படுவதும் அந்த நாட்டிற்கு கூடுதல் நன்மையை அளிக்கிறது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, ரஷ்யாவின் தினசரி எரிபொருள் ஏற்றுமதி வருமானம் சுமார் €510 மில்லியன் (சுமார் £441 மில்லியன்) ஆக உயர்ந்துள்ளது.

இது பெப்ரவரி மாத சராசரியை விட 14% அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருமானம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி