பங்களாதேஷிடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் மருந்து பொருட்கள்!
58,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள மருத்துவ உதவி வரும் வாரத்தில் பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மருந்துகளில் 54 அத்தியாவசிய மருந்துகள் இருப்பதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் அரிபுல் இஸ்லாம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் நடத்திய சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக பங்களாதேஷ் சுகாதார அமைச்சின் ஊடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருத்துவ உதவித்தொகை எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் எனவும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)