இலங்கை

வவுனியாவில் பாலத்திற்குள் விழுந்த சொகுசு கார் விபத்து!

வவுனியா – ஏ9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து இன்று (30.10) விபத்துக்குள்ளாகியுள்ளது.

வவுனியாவில் இருந்து கனகராயன்குளம் நோக்கி ஏ9 வீதியால் சென்ற சொகுசு காரானது பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாந்தசோலை சந்தியில் அமைந்துள்ள பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த காரில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த நபர் ஒருவரும், சாரதியும் பயணித்த நிலையல், அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

அதேநேரம் பாலத்திற்குள் விழுந்த காரை பாரம் தூக்கியின் துணையுடன் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்