இலங்கை செய்தி

மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மாற்றம்!! டயானா மகிழ்ச்சி

 

மதுபானக் கடைகள் மற்றும் மதுபானசாலைகள் திறந்திருக்கும் நேரத்தை நெகிழ்வாகக் கொண்டுவருவதற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வரவேற்றுள்ளார்.

சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் பார்கள் மற்றும் மதுபானக் கடைகளுக்கு நெகிழ்வான திறந்திருக்கும் நேரங்களை அறிமுகப்படுத்த 2024 வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் முன்மொழிவு செய்யப்பட்டது.

சுற்றுலா ஊக்குவிப்பு செயற்பாடுகள் தொடர்பான ஒழுங்குமுறைகள் மற்றும் மென் மதுபான அனுமதிப்பத்திரத்திற்கான புதிய கொள்கையொன்றை திருத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்டது.

இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய டயானா கமகே,

“இந்த முன்மொழிவு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இலங்கையில் சட்டவிரோதமான மதுபான விற்பனையை நிறுத்துவதற்கான ஒருவித முறைமை இருக்க வேண்டிய நேரம் இது” என்று அவர் கூறினார்.

மதுபானக் கடைகள் மற்றும் மதுபானசாலைகளை மூடும் நேரத்தை நீடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அதேவேளை, அவை 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் என்றும் டயானா கமகே முன்மொழிந்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை