இலங்கை

யாழ். வைத்தியசாலைக்குள் மது போதையில் உள்நுழைய முற்பட்ட இருவர்- கைது செய்த பொலிஸார்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்திற்குள் மது போதையில் அத்துமீறி நுழைந்த இருவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு வளாகத்துக்குள் உள்நுழைந்தனர்.

விடயம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.சந்தேக நபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிட வருபவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்படும் நிலைமை தற்போது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்