இலங்கை செய்தி

யாழில் மீனவர்கள் மாயம்: தேடுதலை தீவிரப்படுத்துமாறு அமைச்சர் பணிப்பு!

யாழ். பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (27) இரவு சுமார் 11 மணியளவில் இரண்டு படகுகளில் கடலுக்கு சென்ற குறித்த மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் நேற்று முதல் கடுமையான காற்று வீசிவருவதால், அவர்கள் பயணித்த படகுகள் கரைக்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் பிரதேச மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலை தொடர்பாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அமைச்சர் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகமிடம் தொடர்பு கொண்டு தேடுதல் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், இன்று அதிகாலை விமானப்படையின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தியும் கடற்பரப்பில் விரிவான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், அண்டை நாடுகளின் கடற் பாதுகாப்பு பிரிவுகளுக்கும் காணாமல் போன மீனவர்கள் தொடர்பான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச மட்டத்திலும் தேடுதல் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

காணாமல் போன மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என கடற்படையினருக்கும், சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அமைச்சர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!