இலங்கை

இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் கைதான யாழ் தம்பதி

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதி உட்பட மேலும் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேபாள பாதுகாப்புப் படையினர், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்மாண்டுவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியிலுள்ள வீடொன்றில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை நாளையதினம் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கம்பஹா மற்றும் நுகேகொட பகுதிகளை இருவர் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்