பிரான்ஸ், ஈரான் வெளிவிவகார அமைச்சர்கள் அவசர ஆலோசனை
ஈரான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, பிராந்திய அளவிலான தற்போதைய பதற்றங்கள் மற்றும் சர்வதேச மாற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட கருத்துக்கு ஈரான் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிட வெளிநாடுகளுக்கு அனுமதி இல்லை என்றும், அந்தப் பகுதியின் பாதுகாப்பைப் பராமரிப்பது ஈரானின் தனிப்பட்ட பொறுப்பு என்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.




