உலகம் செய்தி

அமெரிக்க அரசியல் தலைவர்களை கொலை செய்ய சதியா? ஈரான் மறுப்பு!

அமெரிக்க அரசியல் தலைவர்களைக் கொலை செய்ய ஈரான் சதி செய்வதாக அந்நாட்டு வெளிவிவகாரச் செயலாளர் Marco Rubio முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இப்படியான குற்றச்சாட்டுகள் திசைதிருப்பும் நடவடிக்கைகள் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் Esmail Bagheiri தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஈரானியர்களுக்கு எதிராக அமெரிக்கா இழைத்த போர்க்குற்றங்களை மறைக்கவே இத்தகைய பொய்கள் பரப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானிய மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனிதநேயமற்ற செயல்களை மூடிமறைக்க அமெரிக்கா தற்போது பாதிக்கப்பட்டவர் போல நடிக்கிறது என்று Esmail Bagheiri கடுமையாகச் சாடியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!