ஐரோப்பா

உக்ரைனுக்கு சிறப்பு விஜயத்தை மேற்கொள்ளும் சர்வதேச தலைவர்கள்

உக்ரைனின் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு அமெரிக்க மற்றம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அந்நகருக்கு இன்று விசேட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

அமெரிக்க செனட்டர்களான ரிச்சர்ட் ப்ளூமென்டல் மற்றும் ஜேம்ஸ் லேன்க்ஃபோர்ட் ஆகியோர் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ரஷ்யாவிடமிருந்து தொடரும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்புகளின் அவசியம் குறித்து ஜெலன்ஸ்கி அவர்களுடன் கலந்தாலோசிப்பார் எனக் கூறப்படுகிறது.

அதேநேரம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும் António Costa , லக்சம்பர்க் பிரதமர் லூக் ஃபிரைடன் Luc Frieden உள்ளிட்ட அதிகாரிளும் இன்று உக்ரைனுக்கு பயணிக்கவுள்ளனர்.

மேலும் ஆண்டி பர்னம் பிரித்தானியாவின் பிரதமராக பொறுப்பேற்றப்பின் கீவ் நகருக்கு தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்கிறார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பர்னம் “உக்ரைனின் 35வது சுதந்திர தினத்தில், உக்ரைனிய மக்கள் எந்த சந்தேகமும் கொள்ளக்கூடாது. பிரித்து இன்று முதல், தேவைப்படும் காலம் வரை உங்களுக்குப் பின்னால் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

2022-ல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிலிருந்து, இங்கிலாந்து உக்ரைனின் வலுவான ஆதரவாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதுவரை சுமார் £25 பில்லியன் (€29.2 பில்லியன்) ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது, இதில் £16 பில்லியன் (€18.7 பில்லியன்) இராணுவ உதவியும் அடங்கும்.

இதேவேளை உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா செயற்பட்டு வரவதால் அந்நாட்டுடனான ரஷ்யாவின் இராஜதந்திர உறவு சீர்குலைந்துள்ளது. ரஷ்யா பல சந்தர்ப்பங்களில் பிரித்தானியா மீது அணுவாயுத தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்