இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்ட இந்திய கப்பல்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். டில்லி எனும் யுத்த கப்பல் நேற்று (01.08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

163 மீட்டர் நீளமுடைய குறித்த கப்பலில் வருகை தந்துள்ள கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஐ.என்.எஸ். டில்லி கப்பலை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கப்பல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீனாவின் சீனாவின் ‘யுவான் வாங் 5’ கப்பல் கடந்தவாரம் இலங்கையின் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அத்துடன் ஆய்வு கப்பல் ஒன்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து இந்தியா அதிக கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தது.

இந்த பின்னணியில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (02.09) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது அவருடைய பயணம் பிற்போடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்