செய்தி விளையாட்டு

நான்காவது T20 போட்டியில் இந்திய அணி அதிரடி வெற்றி

India wins the fourth T20 match with a bang

2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது.

அந்தவகையில், குயின்ஸ்லாந்தின்(Queensland) கராராவில்(Carrara) நடைபெற்ற நான்காவது T20 போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் சுப்மன் கில்(Shubman Gill) 46 ஓட்டங்களும் அபிஷேக் சர்மா(Abhishek Sharma) 28 ஓட்டங்களும் பெற்றனர்.

அதனை தொடர்ந்து, 168 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 119 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

ஆஸ்திரேலிய அணி சார்பில் மிச்சேல் மார்ஷ்(Mitchell Marsh) 30 ஓட்டங்களும் மத்தியூ சோர்ட்(Matthew Short) 25 ஓட்டங்களும் பெற்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியை 48 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மேலும், இரு அணிகளுக்கு இடையிலான கடைசி T20 போட்டி 8ம் திகதி நடைபெறவுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி