லண்டனில் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு
லண்டனில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய பெரியவர்களுக்கான ஒருவழிப் பேருந்து மற்றும் டிராம் கட்டணங்கள் 10 பென்ஸ் அதிகரித்து £1.85 ஆக உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பயணிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் திருத்தப்பட்ட இந்த விலையில் ‘ஹாப்பர் கட்டணம்’ அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பேருந்துகள் மற்றும் டிராம்களில் ஒரு மணி நேரத்திற்குள் வரம்பற்ற பயணங்களுக்கு ஒரே கட்டணத்தில் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தகுதியான சலுகை அட்டைகளைக் கொண்டவர்களுக்கான கட்டணங்கள் 5 பென்ஸ் உயரும் என்றும் இந்த விலை உயர்வுகள் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TfL-இன் படி, ரயில், ட்யூப் மற்றும் டிராவல்கார்டுகளுக்கான Travelcards விலை வரம்புகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை முடக்கப்பட்டிருக்கும்.
இந்த 10 பென்ஸ் உயர்வால், பேருந்து மற்றும் டிராம் கட்டணங்கள் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட 35 பென்ஸ் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




