இலங்கை

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கையில் 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் ஜனவரி 31ஆம் திகதி வரை உயர்தர பரீட்சை இடம்பெறவுள்ளது.

பரீட்சைக் கால அட்டவணைகள் மற்றும் அனுமதி அட்டைகள் என்பன பாடசாலை அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk எனும் இணையத்தளத்தின் மூலம் தங்களின் உரிய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content