வட அமெரிக்கா

அமெரிக்காவில் கிறிஸ்துமஸுக்குப் பரிசுகள் வாங்கச்சென்ற தந்தை – 5 பிள்ளைகள் மரணம்

அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் தந்தை கிறிஸ்துமஸுக்குப் பரிசுகளும் இதரப் பொருள்களும் வாங்கச் சென்றிருந்த போது வீட்டில் பரவிய தீயில் 5 பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களில் 4 பேர் அவரது பிள்ளைகள். மேலும் ஒருவர் உறவுக்காரப் பிள்ளை என தெரியவந்துள்ளது. 2 மாடி வீட்டில் பரவிய அந்தத் தீயில் 2, 4, 5, 11, 13 வயதுப் பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.

எனினும் தந்தையின் பெயரையோ பிள்ளைகளின் பெயர்களையோ பொலிஸார் வெளியிடவில்லை. தீ மூண்டதற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.

தீ கீழ்மாடி நுழைவாயிலில் தொடங்கியதாக நம்பப்படுகிறது. அதனால்தான் மேல் மாடியில் இருந்த பிள்ளைகளால் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் போயிருக்கலாம் என்று ஆரம்பக் கட்ட விசாரணை காட்டுகிறது.

தீயை அணைக்க அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கடுமையாக முயற்சிசெய்தனர். ஆனால் வீட்டில் இருந்து வந்த கரும்புகை மிகப் பெரிய தடங்கலாக அமைந்தது.

உயிரிழந்த பிள்ளைகளுக்கு அந்த வீடமைப்புப் பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில் அஞ்சலி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்