ஐரோப்பா

சிறிய படகில் நுழைவேன் : பிரித்தானிய அரசாங்கத்திற்கு சவால் விடுத்த அமெரிக்கர்!!

அமெரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரகர் ஒருவர் பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாலண்டினா கோமஸ் (Valentina Gomez) என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில், குர்ஆனின் ஒரு பிரதியை எரிக்கும் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதனை மேற்கோள்காட்டியே  மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) “கோமஸ் நாட்டில் இருப்பது பொது நலனுக்கு உகந்ததாக இருக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோமஸ், மே 16 அன்று லண்டனில் நடைபெறவுள்ள யுனைட் தி கிங்டம்’ ( Unite the Kingdom) பேரணியில் உரையாற்றப் போவதாக குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கோமாஸ் ஒரு சிறிய படகில் பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்சிப்பதாகவும்,  தன்னைத் தடுத்து நிறுத்த முடியுமா என்றும் அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!